எலிமினேட்டர் சுற்று - டெல்லி vs ஐதராபாத் : கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி

ஐ.பி.எல்.லின் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் விளையாடியது.
எலிமினேட்டர் சுற்று - டெல்லி vs ஐதராபாத் : கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி
x
ஐ.பி.எல்.லின் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் விளையாடியது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனீஷ் பான்டே 30 ரன்களும் அடித்தனர். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி சார்பில் ப்ரித்வி ஷா 56 ரன்களும், பன்ட் 49 ரன்களும் சேர்த்தனர். இறுதியாக 20வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்