2வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு
பதிவு : ஏப்ரல் 20, 2019, 04:58 AM
ஐ.பி.எல். தொடரில் விராட் கோலியின் அதிரடி சதத்தால்,பெங்களூரு அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்களும்,கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும் விளாசினர்.இதனால் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து தடுமாறியது. இருப்பினும் வழக்கம் போல ரஸில் மற்றும் நிதிஷ் ரானா ஜோடி, பெங்களூரு பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தன.கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரில் ரஸில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.ரானா 46 பந்துகளில் 85 ரன்களும், ரஸில் 25 பந்துகளில் 65 ரன்களும் குவித்து, பெங்களூரு அணியை நடுங்க வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல். டெல்லி vs மும்பை : மும்பை அணி அபார வெற்றி

ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

51 views

பிற செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

468 views

இந்திய நீச்சல் சம்மேளன புதிய தலைவராக தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் தேர்வு

தமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.

8 views

மாநில அளவிலான சதுரங்க போட்டி : 180க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் முத்தூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியுள்ளது.

24 views

"அன்புக்கு நன்றி" - வாட்சன் வெளியிட்ட வீடியோ

ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வெற்றி பெற செய்ய ரத்தம் வழிய போராடிய ஷேன்வாட்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

574 views

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷிய நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டீமாக் நியமிக்கப்பட்டார்.

118 views

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷிய நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டீமாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.