ராஜஸ்தான் vs பெங்களூரு : ஷேரயாஸ் பந்து வீச்சில் சுருண்டது பெங்களூரு

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் vs பெங்களூரு : ஷேரயாஸ் பந்து வீச்சில் சுருண்டது பெங்களூரு
x
ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்த்தீவ் பட்டேல் 67 ரன்கள் சேர்த்தார். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக பட்லர் 59 ரன்கள் குவித்தார். மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஷேரயாஸ் கோபால் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.விளையாடிய 4 போட்டியிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளதால் பெங்களூரு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்