பெங்களூருவை புரட்டிப் போட்ட சென்னை : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

5 ஆயிரம் ரன்களை கடந்து ரெய்னா சாதனை
பெங்களூருவை புரட்டிப் போட்ட சென்னை : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி
x
ஐ.பி.எல். சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் புரட்டிப் போட்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூரு அணி 70 ரன்களில் சுருண்டது. ஹர்பஜன், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் பொறுமையுடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. 17 புள்ளி 3வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி வெற்றியை எட்டியது. இந்த ஆட்டத்தின் போது சென்னை அணியின் ரெய்னா, ஐ.பி.எல். வரலாற்றில் 5 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து 7வது முறையாக பெங்களூரு அணியை சென்னை வீழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்