"தல" டோனி, "சின்ன தல" ரெய்னா - அதிர்ந்த சேப்பாக்கம் அரங்கம்

12 வது சீசன் ஐ.பி.எல் தொடர் நெருங்கி வரும் நிலையில், சென்னை அணி வீர‌ர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
தல டோனி, சின்ன தல ரெய்னா - அதிர்ந்த சேப்பாக்கம் அரங்கம்
x
12 வது சீசன் ஐ.பி.எல் தொடர் நெருங்கி வரும் நிலையில், சென்னை அணி வீர‌ர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அணியை சேர்ந்த வீர‌ர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இந்த போட்டியில் விளையாடினர். இதனை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. இதனால், உண்மையாகவே ஐ.பி.எல் போட்டி நடப்பதை போல சேப்பாக்கம் மைதானம் ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழிந்த‌து. குறிப்பாக டோனி களம் இறங்கும்போது, தல என்ற கோஷத்தாலும், ரெய்னா களமிறங்கியபோது சின்னத்தல என்ற கோஷத்தாலும் அரங்கமே அதிர்ந்த‌து. நெகிழ்ச்சியடைந்த ரெய்னா கையை உயர்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்