இந்திய அணி கடந்து வந்த பாதை : 500வது வெற்றியை பெற்ற இந்தியா

இந்திய அணி 400வது வெற்றியை அடையும் போது தோனி அணியை வழிநடத்தினார்.
இந்திய அணி கடந்து வந்த பாதை : 500வது வெற்றியை பெற்ற இந்தியா
x
கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத நாடாக விளங்கி வரும் இந்தியா, கடந்த 1974ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியது. 

இந்தியா தனது முதல் வெற்றியை கிழக்கு ஆப்பிரிக்காவுடன் பெற்றது.  ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா என்ன செய்துவிட போகிறது என்ன எளனம் செய்தவர்களுக்கு 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று பதிலடி தந்தது இந்தியா

ஒருநாள் போட்டி இன்றும் பிரபலமாக இருப்பதற்கு காரணம் , சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் தான்.18 ஆயிரத்து 426 ரன்கள் குவித்து சர்வதேச அளவில் அதிக ரன் குவித்தவர், அதிக சதம் விளாசியவர் என்ற சாதனைகளை படைத்தவர் டெண்டுல்கர்.

இந்திய அணியை அதிக முறை தலைமை தாங்கியது மகேந்திர சிங் தோனி .  200 போட்டியில் தோனி தலைமை தாங்க, அதில் இந்தியா 110 போட்டியில் வென்றுள்ளது. 

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் தோனி தலைமையிலேயே இந்தியா வென்றது. கபில்தேவ், டிராவிட், கங்குலி, கோலி, யுவராஜ், சேவாக், அசாருதீன், கும்ப்ளே போன்ற ஏராளமான ஜாம்பாங்களை இந்திய அணி உருவாக்கியுள்ளது. 

தற்போது 500 வெற்றிகளை மூலம் அதிக வெற்றி பெற்ற அணி பட்டியலில் இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளது. இன்னும் பல வெற்றிகளை இந்தியா பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்