அந்நிய மண்ணில் கலக்கும் இந்திய அணி - உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்பு

பேட்டிங், பந்துவீச்சில் தொடர்ந்து அசத்தல்
அந்நிய மண்ணில் கலக்கும் இந்திய அணி - உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்பு
x
உள்ளூரில் புலி, வெளியூரில் எலி என்று ஒரு காலக்கட்டத்தில் இந்திய அணி விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த விமர்சனங்களை தகுடுபுடி ஆக்கியுள்ளது இந்திய அணி.கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,ஆகிய ஒருநாள் தொடரை இந்தியா வென்று அசத்தியுள்ளது.இந்தியாவின் பேட்டிங் எப்போதும் பலமாக இருந்தாலும், தற்போது பந்துவீச்சிலும் ஆச்சரியப்படும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் வேகப்பந்துவீச்சில் கலக்கி எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்,. இருப்பினும் எதிரணியை கதிகலங்க வைப்பது சாஹல், குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சு தான். இந்த ஜோடி மட்டும் ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. சாஹல், குல்தீப் யாதவின் எழுச்சி, இந்திய அணியின் பலமாக கருதப்படுகிறது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, தவான், கோலி என மூன்று வீரர்களும் நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். இவர்களை தவிர தோனி, கேதர் ஜாதவ், ராயுடு நடுவரிசையில் மலை போல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்கின்றனர். ஹர்திக் பாண்டியாவும் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இதனால் வரும் மே மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனினும் உலகக் கோப்பைக்கு முன் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுவதால், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் உடல் மற்றும் மன அளவிலும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், அவர்களுக்கு ஐ.பி.எல். போட்டியில் சுழற்சி முறையில் ஓய்வு அளிப்பது அவசியமாகும்.

Next Story

மேலும் செய்திகள்