இந்தியா, நியூசி. இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி

இந்தியா, நியூசி. இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி
இந்தியா, நியூசி. இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி
x
ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. இதேபோல, இரண்டு ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில், தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய கேப்டன் விராட் கோலி, இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்தனர். இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்