விடை பெறுகிறார் ஆண்டி முர்ரே

பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் குறித்து ஒரு சிறிய தொகுப்பை தற்போது காணலாம்
விடை பெறுகிறார் ஆண்டி முர்ரே
x
ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 20 மாதங்களாக இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வருவதாக தெரிவித்தார். இதற்கு மேலும் தம்மால், வலியை தாங்கி கொள்ள முடியாது என்று கண்ணீர் மல்க தெரிவித்த ஆன்டி முர்ரே ஆஸ்திரேலிய ஓபன் தொடரே தனது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்தார். 

டென்னிஸ் உலகின் மிகவும் பாரம்பரியமான விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை, பிரிட்டனை சேர்ந்த வீரர்களால் 77 ஆண்டுகளாக வெல்ல முடியவில்லை. 77 ஆண்டுக்கால பிரிட்டிஷ்காரர்களின் கனவை நிறைவேற்றிய பெருமை ஆண்டி முர்ரேவையே சேரும்.  அதுவும் ஒரு முறை அல்ல, 2 முறை விம்பிள்டன் கோப்பையை வென்று அசத்தியவர் ஆண்டி முர்ரே. இதுவரை 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆண்டி முர்ரே, 2 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஒரே டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

ஆண்டி முர்ரேவின் இந்த அறிவிப்பு பிரிட்டன் மக்களை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்