இந்தியா Vs ஆஸி 3வது டெஸ்ட் போட்டி : 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸி. வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய இந்திய வீரர்கள்
இந்தியா Vs ஆஸி 3வது டெஸ்ட் போட்டி : 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
x
மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. மயாங்க் அகர்வால், புஜாரா, கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 151 ரன்களுக்கு சுருண்டது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சிய நிலையில் இன்று இறுதி நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி 2க்கு ஒன்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்