ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் : எந்த அணியில் யார் யார் இடம்பெறுகின்றனர் ?

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்திய வீரர் ஹனுமா விஹாரியை 2 கோடி ரூபாய்க்கும், அக்சர் பட்டேலை 5 கோடி ரூபாய்க்கும், இஷாந்த் சர்மாவை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.
x
ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்திய வீரர் ஹனுமா விஹாரியை 2 கோடி ரூபாய்க்கும், அக்சர் பட்டேலை 5 கோடி ரூபாய்க்கும், இஷாந்த் சர்மாவை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது. 

இந்திய வீரர் ஜெயதேவ் உனாட்கட்டை  8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. வேகப்பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை 5 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. முகமது ஷமியை 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பூரானை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக இருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. இதே போன்று பிராத்வெயிட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இலங்கை வீரர் மலிங்காவை 2 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலத்தில் வாங்கியது.

Next Story

மேலும் செய்திகள்