ரூ.7 கோடி மதிப்பில் உலகதரம் வாய்ந்த சிந்தட்டிக் ஓடுதளம் - முன்னாள் வீராங்கனைகள் நேரில் ஆய்வு
ஊட்டியில் 7 கோடி ரூபாய் மதிபீட்டில் அமைக்கபட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை முன்னாள் தடகள வீராங்கனைகள் நேரில் ஆய்வு.
ஊட்டியில் விளையாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 7 கோடி ரூபாய் மதிபீட்டில் அமைக்கபட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் மற்றும் முன்னாள் ஆசிய தங்க மங்கை வள்சம்மா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்த ஓடுதளத்தில் பயிற்சி பெறும் வீரர் வீராங்கனைகள் எந்த போட்டியில் பங்கேற்றாலும் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
Next Story