ஐ.சி.சி. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி - கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர், சதம் அடித்து சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக, இந்தியா 194 ரன் குவிப்பு
ஐ.சி.சி. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி - கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர், சதம் அடித்து சாதனை
x
ஐ.சி.சி. மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியைச் சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது. இதில் கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர், 49 பந்துகளை சந்தித்து சதமடித்து அசத்தினார். மொத்தம் 51 பந்துகளை சந்தித்த அவர், 103 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். கவுர், மகளிர் டி20 போட்டியில்  சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்