டி20 போட்டி : மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா
பதிவு : நவம்பர் 05, 2018, 12:56 AM
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. அதன் படி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், மேற்கு இந்திய தீவுகள் அணி,  109 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் அடுத்த‌டுத்து இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும், தினேஷ் கார்த்திக் மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். இதனால் 18 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டியது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.