ரசிகர்களை கவரும் கடற்கரை மல்யுத்தம்

துருக்கியில் நடைபெற்ற கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : ரசிகர்களை கவரும் கடற்கரை மல்யுத்தம்
ரசிகர்களை கவரும் கடற்கரை மல்யுத்தம்
x
Beach volleyball போல், தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் விளையாட்டு தான் Beach Wrestling.. கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர, கடற்கரை மணலில் மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வந்தது.  கடந்து 2005ஆம் ஆண்டு முதல் Beach Wrestling ஐ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 

 பொதுவாக ஆடவர் பிரிவினரை விட மகளிர் பிரிவின் BEACH WRESTLING போட்டிக்கு தான் ரசிகர்கள் அதிகம்.. நடப்பாண்டிற்கான சாம்பியன்ஷிப் போட்டி துருக்கி நாட்டின் SARIGERME கடற்கரை பகுதியில் நடந்தது. இந்த தொடரின் மகளிர் பிரிவில் ரொமேனிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தினர். 

50 கிலோ எடைப்பிரிவில் ரொமேனிய வீராங்கனை STEFANIA 
உள்ளூர் வீராங்கனை SEVIL-ஐ 3க்கு0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்

இதே போன்று 60 கிலோ எடைப் பிரிவில் இத்தாலி வீராங்கனை FRANCESCA வை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி ரொமேனிய வீராங்கனை KRISTZA தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மகளிருக்கான 70 கிலோ எடைப் பிரிவில் நார்வே வீராங்கனை சாரோலேட்டை 3க்கு1 என்ற புள்ளிகள் கணக்கில் ரொமேனிய வீராங்கனை ADINA ELENA வெற்றி பெற்றார். 
90 கிலோ எடைப் பிரிவில் ரொமேனிய வீராங்கனை CATALINA தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனிடையே ஆடவருக்கான 90 கிலோ எடைப் பிரிவில்  பாகிஸ்தான் வீரர் முகமது இமான், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த தொடரில் 17  நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைள் கலந்து கொண்டனர். MAT களுக்கு பதிலாக கடற்கரையில் நடைபெறும் இந்தப் போட்டியில் மல்யுத்தத்தை போல, எதிர் வீரரை கொட்டை விட்டு தள்ளுவது, மல்யுத்த பிடி மூலம் கீழே தள்ளுவதை வைத்து புள்ளிகள் வழங்கப்படும். 

Next Story

மேலும் செய்திகள்