உலக சர்ஃபிங் லீக் போட்டி : தகுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் வெற்றி

உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் தகுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் ரியான் 15.13 புள்ளிகளுடன் வெற்றி பெற்றார்.
உலக சர்ஃபிங் லீக் போட்டி : தகுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் வெற்றி
x
போர்ச்சுகலின் எரிசைரா கடற்கரை பகுதியில், உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ரியான் 15.13 புள்ளிகளுடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் தொடரின் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தகுதி சுற்றுகளின் அடுத்த கட்ட போட்டிகள் பிரான்ஸில் நடைபெறவுள்ள நிலையில், முதல் எட்டு இடங்களை பிடிக்கும் வீர்ர்களுக்கு மட்டுமே, இறுதி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்