ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது  இந்தியா
x
துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ், அதிகபட்சமாக 121 ரன்கள் குவிக்க, வங்கதேச அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 223 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 15 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போட்டியின் முக்கிய கட்டத்தில் தோனி, கார்த்திக் ஆகியோர் வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. புவனேஸ்வர் குமார், ஜடேஜா ஜோடி சற்று தாக்குப் பிடித்து ரன்களை சேர்க்க, இறுதியில் கேதர் ஜாதவ் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. 


Next Story

மேலும் செய்திகள்