ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்?

ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? - இந்தியா Vs வங்கதேசம் இன்று மோதல்
ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்?
x
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் இந்தியாவும், வங்கேதேசமும் மோதுகின்றன.  துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. மேலும், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கடந்த 11 போட்டிகளில் தோல்வியே அடையவில்லை.வங்கதேச அணியில் தமீம் இக்பால், ஷகிபுல் ஹசன் ஆகியோர் இல்லாதது பாதகமாகவே கருதப்படுகிறது. எனினும் ரஹிம், முகமதுல்லா, மித்துன் உள்ளிட்ட வீரர்கள் நல்ல பார்மில் உள்ளது அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது.கடந்த சில போட்டிகளாக சொதப்பி வந்த வேகபந்துவீச்சாளர் ரஹ்மான் , பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசியது, வங்கதேசத்துக்கு நிம்மதியை அளித்துள்ளது.  இதே போன்று வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர் மெஹதிஹயம் ரன்களை கட்டுப்படுத் நெருக்கடியை அளிக்கிறார். 

வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட்டு விளையாடினால் அது நிச்சயம் இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான செய்த தவறை இந்தியா திருத்திக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது.  ஆசிய கோப்பையை 7வது முறையாக வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. வங்கதேசமும் இந்தியாவும் 34 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 28 முறையும், வங்கதேசம் 5 முறையும் வென்றுள்ளன. 




Next Story

மேலும் செய்திகள்