தடகளத்தில் தங்கம் வென்று வரும் மூதாட்டி - 102 வயதிலும் தளராத சாதனை முயற்சி
பதிவு : செப்டம்பர் 25, 2018, 09:44 AM
மிகச் சிறந்த தடகள வீராங்கனை
இவர் தான், மான் கவுர் (Man Kaur)... பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவைச் சேர்ந்த இவருக்கு, வயது 102 ஆகிறது. இவர், தமது 93-வது வயதில் தான், தடகள பயிற்சி பெற தொடங்கினார். தமது 102 வயதில், மிகச் சிறந்த தடகள வீராங்கனை ஆகிவிட்டார். ஆரம்பத்தில், நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்த தொடங்கியவர் குறுகிய காலத்திலேயே, போட்டிக் களத்தில் பிரகாசிக்க தொடங்கி விட்டார். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மான் கவுரை ஊக்கப்படுத்து வருவது அவரது மகன், குர்தேவ். 78 வயதாகும் இவரும் தடகள வீரர் தான். முதுமையிலும் தாயார் உடல் வலிமையுடன் இருப்பதை கவனித்தவர், பயிற்சி அளித்து முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்க வைத்துவிட்டார். குர்தேவ், உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தாயாருக்கும் பிரத்யேக பயிற்சி அளித்து அந்த போட்டிகளில் பங்கேற்க வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.  சமீபத்தில், ஸ்பெயினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100-104 வயது பிரிவில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மான் கவுர் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். ஏற்கனவே கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நடந்த போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர், தற்போதும் சாதித்து விட்டார். தொடர்ந்து இரண்டுமுறை தங்கப்பதக்கம் வென்றிருக்கும் மான் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இவருக்கு, எந்தவிதமான உடல் நலக் குறைபாடும் வந்ததில்லை. 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை முதல் முயற்சியிலேயே 1 நிமிடம் 1 விநாடியில் கடந்துவிட்டார். அதனால் அவரால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1467 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2596 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1568 views

பிற செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

28 views

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் - 4 வது முறையாக பட்டம் வென்றார், ஜோனாதன் ரீ

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

29 views

இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்ட் : இந்தியா வெற்றி தொடரையும் கைப்பற்றியது

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

204 views

தேசிய அளவிலான கூடைப்பந்து தொடர் தொடக்கம்

தஞ்சையில் தேசிய அளவிலான கூடைபந்து போட்டித் தொடர் தொடங்கியுள்ளது.

31 views

போர்சுக்கல் : போட்டி போட்டு கொண்டு சீறி பாய்ந்த கார், சைக்கிள்..!

போர்சுக்கலில் வேகத்தில் சிறந்தது இரு சக்கர வாகனமா அல்லது நான்கு சக்கர வாகனமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக விசித்திர பந்தயம் நடைபெற்றது.

89 views

அர்ஜென்டினா : உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி..!

அர்ஜென்டினாவில் உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் பன்னிரண்டாவது கட்டம் நேற்று நடைபெற்றது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.