உலகின் மிக கடினமான ரிலே பந்தயம்

உலகின் மிக கடினமான ரிலே பந்தயம் குறித்து தற்போது காணலாம்..
உலகின் மிக கடினமான ரிலே பந்தயம்
x
ரிலே போட்டியை கேள்வி பட்டிருப்போம்.. ஆனால் DOLOMITENMANN ரிலே என்றால் என்ன தெரியுமா..?

சாதாரண ரிலே போட்டி என்றால் ஒரு வீரர் பந்தயத்தை முடித்தவுடன் அதே அணியை சேர்ந்த அடுத்த வீரர் பந்தயத்தை தொடங்குவர். இதே போல் தான் DOLOMITENMANN ரிலேவும். ஆனால் இது தடகளத்தில் நடக்காது.. 

போட்டியாளர்கள் முதலில் தரையிலிருந்து ஓடத் தொடங்குவர்.. நகரின் முக்கிய வீதிகளில் ஆரம்பமாகும் இந்த ஓட்டம், திடீரென்று மலைப்பகுதிக்கு சென்று, மலையில் ஏறும் வகையில் போட்டி அமைப்பு மாறும்.

பின்னர், ஓட்டம் முடிந்தவுடன் அடுத்த வீரர் ஓடத் தயராவார் என்று நினைக்கலாம்.. ஆனால் அது தான் இல்லை.. அந்த அணியை சேர்ந்த அடுத்த வீரர், பாராசூட்டில் பறப்பார்..

குறிப்பிட்ட தூரம் பாராசூட்டில் பறக்கும் வீரர்கள் தங்களது பந்தயத்தை முடித்தவுடன், சைக்கிளில் தயாராக உள்ள வீரர்கள் தங்களது பந்தயத்தை தொடங்குவர். அவர்களும் கரடு முரடான பாதையில் சைக்கிளில் சுமார் 27 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து பந்தயத்தை முடிப்பர்.  

அவர்கள் முடித்தவன்,  படகில் தயாராக இருக்கும் வீரர்கள் , தங்களது பந்தயத்தை துடுப்பு போட்டு ஓடத்தில் வேகமாக பயணிப்பர்.  பந்தயத்தை முடித்தவுடன் துடுப்புடன் யார் எல்லைக் கொட்டை முடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்... 

உலகின் மிக கடினமான ரிலே போட்டியாக கருதப்படும் இந்த ரிலே பந்தயம்,  ஆஸ்திரியாவின் டோலோமைட் பகுதியில் 1988ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. இந்த சிக்கலான பந்தயத்தை உருவாக்கியவர் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த WERNER GRESSMAN தான்.  நிலம், காடு, காற்று, தண்ணீரில் நடைபெறும் இந்த வினோதமான ரிலே பந்தயத்தில் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு பல ஒலிம்பிக் சாம்பியன்கள் மற்றும் உலக சாம்பியன்கள் தவறாமல் பங்கேற்பர். 

Next Story

மேலும் செய்திகள்