ரவி சாஸ்திரியின் செயல்பாடு எப்படி இருக்கு?
பதிவு : செப்டம்பர் 05, 2018, 07:23 PM
ரவி சாஸ்திரி மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு, திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி ஏன்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி  கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நியமிக்கப்பட்டார். 

விராட் கோலியுடன் அவர் கொண்ட நட்பின் காரணமாக, கோலியின் ஆதரவுடன் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே.

கேப்டன் மற்றும் வீரர்கள்  தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுவதும், அணியை எப்படி பலப்படுத்துவது, எப்படி யுத்திகளை கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதே பயிற்சியாளரின் பணி.


ஆனால் பயிற்சியாளர்கள் தாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என்றும், தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதையே இப்போதுள்ள கேப்டன்கள் விரும்புகின்றனர். இதனால் தான் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் என்பது தனிக்கதை.

சரி ரவி சாஸ்திரி, விராட் கோலியின் கூட்டணி எப்படி செயல்படுகிறது என்பதை தற்போது காணலாம்.

ரவி சாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு இந்தியா 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 வெற்றி, 5 தோல்வி, 2 டிராவை இந்தியா கண்டுள்ளது. தோல்வி அடைந்த 5 போட்டிகளில் 4 போட்டியில் இந்தியா வென்றிருக்க வேண்டியது. அதற்கு வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.


ரவி சாஸ்த்ரி பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 22 போட்டிகளில் 18 போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 4 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது. இதில் கடைசியாக நடந்த இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்திய அணி மீதுள்ள தற்போது குற்றச்சாட்டுகளே திறமையாக வீரர்கள் இருந்தும் தோல்வி அடைவது தான். இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும், கேப்டன் கோலியுமே காரணம் என்று முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா Vs பாகிஸ்தான் - சுவாரஸ்ய நிகழ்வுகள்

பாகிஸ்தான், இந்திய அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை தற்போது பார்க்கலாம்..

53 views

கோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நிறுத்தினார்.

5969 views

பிற செய்திகள்

காமன்வெல்த் : துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.

5 views

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் : சானியா மிர்சா உறுதி

டென்னிஸ் விளையாடுவதை விட்டுவிடவில்லை என சானியா மிர்சா கூறியுள்ளார்.

59 views

பார்முலா-1 கார்பந்தயம் - ஹாமில்டன் வெற்றி

பிரான்ஸில் நடைபெற்ற ஃபார்முலா- ஓன் கார் பந்தயத்தின், சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார்.

4 views

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது.

4 views

ஹாலே ஓபன் 10-வது முறையாக பெடரர் சாம்பியன்

ஜெர்மனியில் நடைபெற்ற, 'ஹாலே ஓபன் டென்னிஸ்' தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

9 views

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணி வெளியேறியது

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

313 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.