ஆசிய விளையாட்டு போட்டி : மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு சாய்னா - பி.வி. சிந்து தகுதி

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆசிய விளையாட்டு போட்டி : மகளிர் ஒற்றையர் பிரிவில்  காலிறுதிக்கு சாய்னா - பி.வி. சிந்து தகுதி
x
ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா, காலிறுதிக்கு முன்னேறினார். இவர், இந்தோனேஷிய வீராங்கனை பிட்ரியானியை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த போட்டியில், சாய்னா, 21 க்கு 6, 21 க்கு 14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேஷிய வீராங்கனை மிரிஸ்காவுடன் மோதினார். இந்த போட்டியில், 21 க்கு 12, 21 க்கு 15 என்ற நேர் செட் கணக்கில் வென்று, பி.வி சிந்து, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்