டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், டுட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி
x
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டுட்டி பேட்ரியாட்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ், 19 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ்  அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்