செஸ் மற்றும் பாக்சிங் இரண்டும் கலந்த ஓர் விளையாட்டு
பதிவு : ஜூலை 27, 2018, 11:12 AM
செஸ் பாக்ஸிங்.. செஸ் போட்டியையும், பாக்ஸிங் போட்டியையும் ஒன்று சேர்த்த விளையாட்டு...
செஸ் பாக்ஸிங்..செஸ் போட்டியையும், பாக்ஸிங் போட்டியையும் ஒன்று சேர்த்த விளையாட்டு..அதாவது ஒரே சமயத்தில், உடல் வலிமையையும், புத்தி கூர்மையையும் சோதிக்கும் ஓர் விசித்திர விளையாட்டு.நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Iepe Rubingh என்பவர் இந்த விளையாட்டை கண்டுபிடித்தார். பெர்லின் நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் முதலாக இந்த போட்டி நடத்தப்பட்டது. 
தற்போது இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என பல நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம்..செஸ் பாக்ஸிங் போட்டியில் மொத்தம் 11 சுற்றுகள் , ஒவ்வொரு சுற்றுக்கும் மூன்று நிமிடங்கள்... முதல் சுற்று செஸ் போட்டி, இரண்டாவது சுற்று பாக்ஸிங்...  என, மாறி மாறி, இறுதியாக செஸ் போட்டியில் ஆட்டம் முடிவடையும்.மொத்தம் ஆறு செஸ் சுற்றுகள் , 5 சுற்றுகள் பாக்ஸிங் சுற்றுகள் நடைபெறும்..செஸ் சுற்றுக்கு பின், மேடையில் இருக்கும் செஸ் போர்டு உடனடியாக அகற்றப்பட்டு, பாக்ஸிங் நடைபெறும்... அதில் ஏற்படும் காயங்களை பொருட்படுத்தாமல் உடனடியாக வீரர்கள் அடுத்த செஸ் சுற்றுக்கு தயாராகவேண்டும்... செஸ் சுற்றின்போது, வீரர்களின் கவனம் சிதறாமல் இருக்க, காதில் இசைக்கருவி பொருத்தப்படும்.பாக்சிங் சுற்றின்போது, நாக் அவுட் முறையில் வீழ்த்தினாலும், செஸ் போட்டியின்போது செக்மேட் வைத்தாலும் சிறப்பு புள்ளிகள் கொடுக்கப்படும்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக செஸ் பாக்சிங் சேம்பியன்ஷிப் போட்டியில், லைட் ஹெவி வெயிட் பிரிவில், இந்தியாவின் சைலேஷ் திரிபதி முதலிடம் பிடித்தார். மேலும், லைட் வெயிட் மற்றும் மிடில் வெயிட்  பிரிவுகளில் வீ.சதீஸ் , பன்டம் வெயிட் பிரிவில், நவீன்குமார், ஆகிய இந்திய வீரர்கள் உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : தங்கம் வென்று அசத்தினார், மேரிகோம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்க பதக்கம் வென்றார்.

150 views

யார் இந்த மைக் டைசன்...??

மைக் டைசன்.. குத்துச்சண்டை களத்தின் இரும்பு மனிதன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.. குத்துச்சண்டை விளையாட்டை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றவர்.

163 views

ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்

ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

37 views

பிற செய்திகள்

சென்னை அணியிலிருந்து லுங்கி கிடி விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயம் காரணமாக விலகினார்.

56 views

சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர்.

67 views

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்

அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.