ஆசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி- இந்தியாவிற்கு தங்கம்
பதிவு : ஜூலை 23, 2018, 08:31 AM
மாற்றம் : ஜூலை 23, 2018, 10:39 AM
ஆசிய ஜூனியர் பேட்மிட்டன் ஆடவர் பிரிவில் 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ஆசிய ஜூனியர் பேட்மிட்டன் ஆடவர் பிரிவில் 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய 17 வயது லக்‌ஷயா சென், தாய்லாந்து வீரர் குன்லாவுட்டை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 21-19, 21-18  என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீர‌ரை எளிதாக வீழ்த்தினார் லக்‌ஷயா சென்.. இதற்கு முன் 1965 ஆம் ஆண்டு கவுதம் தக்கார் என்பவர் தங்கம் வென்றிருந்தார். அதற்கு பின்னர் ஆடவர் பிரிவில், தற்போது தான் இந்தியாவிற்கு  தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.