உலகக் கோப்பை இறுதிப் போட்டி : சோகத்தில் மூழ்கிய குரோஷிய மக்கள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் குரோஷிய அணி தோல்வியை தழுவியதை அடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி : சோகத்தில் மூழ்கிய குரோஷிய மக்கள்
x
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் குரோஷிய அணி தோல்வியை தழுவியதை அடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தலைநகர்  ஜாகீரிபில் திரண்ட ரசிகர்கள், பிரான்ஸ் அணி அடுத்தடுத்து கோல் அடித்ததை அடுத்து உற்சாகத்தை இழந்தனர். பின்னர், குரோஷிய தோல்வியை தழுவியதை  அடுத்து, சில ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.  ரசிகர்கள் மனதை கவர்ந்த குரோஷிய அதிபர் குரோஷிய வீரர்களுடன் சோகத்தை பகிர்ந்தார். உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை நேரில் கண்ட குரோஷிய அதிபர் கொலிந்தா கிராபர் , தனது செயல்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். குரோஷிய கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து  போட்டிய நேரில் கண்டு தங்களது அணி வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். பிரான்ஸ் அணி வென்றதும், தனது சோகத்தை அடக்கிக்கொண்டு பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், பரிசளிப்பு விழாவில் குரோஷிய வீரர்களை  கடடியணைத்து தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார். அதே சமயம் பிரான்ஸ் அணி வீரர்களை அதிபர் கொலிந்தா பாராட்டினார். தனது செயலால் ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ள குரோஷிய அதிபர் கொலிந்தா, தற்போது இணையத்தை கலக்கி வருகிறார். கொட்டும் மழையில் ரஷ்ய அதிபருக்கு மட்டும் குடை உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரிசளிப்பு விழாவின் போது மழை கொட்டி தீர்த்தது. அப்போது ரஷ்ய, பிரான்ஸ், குரோஷிய அதிபர்கள் மேடையில் நிற்க, ரஷ்ய அதிபர் புடின்க்கு மட்டும் குடைப் பிடிக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகளவு பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து  வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்