உலக கோப்பை கால்பந்து : ஜெயிக்கப்போவது யாரு?
பதிவு : ஜூலை 12, 2018, 08:32 PM
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், வருகிற 15- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் அணியை, குரோஷியா எதிர்கொள்கிறது. 3- வது இடத்தை முடிவு செய்யும் போட்டியில், பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள், வருகிற சனிக்கிழமை மோதுகின்றன.
உலக கோப்பை கால்பந்து திருவிழா, நிறைவு கட்டத்தை எட்டி விட்டது. இந்திய நேரப்படி, நேற்றிரவு 11.30 மணிக்கு துவங்கிய 2 - வது அரை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை குரோஷியா எதிர் கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில்,  2 க்கு 1 என்ற கோல் கணக்கில்,  குரோஷியா வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றுக்குள் குரோஷியா நுழைந்திருப்பது இதுவே முதன்முறை. எனவே, அந்நாட்டு ரசிகர்கள், உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, வருகிற 15 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இரவு 8.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில், பிரான்ஸ் அணியுடன் குரோஷியா மோதுகிறது. 
 
முன்னதாக, வருகிற 14- ம் தேதி சனிக்கிழமை 3 - வது இடத்திற்கான போட்டியில், பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு துவங்கும்.  

எனவே, இவ்விரு போட்டிகளையும் காண, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள், ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கால்பந்து மைதானத்துக்குள் புகுந்த கங்காரு

மைதானத்துக்குள் நுழைந்த கங்காரு முப்பது நிமிடங்களுக்கு மேலாக தனது சுட்டித் தனத்தால் அனைவரையும் கவர்ந்தது.

190 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து தொடரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

135 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல்-உருகுவே-ஸ்பெயின் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக உருகுவே தகுதி....

1111 views

பிற செய்திகள்

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

139 views

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

439 views

இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,

33 views

சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

19 views

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

9 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.