டி.என்.பி.எல் 3வது சீசன் : "அணிகள் அனைத்தும் சம பலத்துடன் உள்ளன" - சிவராமகிருஷ்ணன்

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில், இந்த ஆண்டு முதல் பிற மாநிலத்தை சேர்ந்த 2 வீரர்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எல் 3வது சீசன் : அணிகள் அனைத்தும் சம பலத்துடன் உள்ளன - சிவராமகிருஷ்ணன்
x
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் 3வது சீசன் போட்டி தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை மொத்தம் 33 நாட்கள்  இப்போட்டிகள், நெல்லை, திண்டுக்கல், சென்னை மைதானங்களில் நடக்கிறது. இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சிவராமகிருஷ்ணன், வி.பி.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆண்டு முதல் பிறமாநிலத்தை சேர்ந்த வீரர்கள் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கத்தின் தடையில்லா சான்றுகள் சமர்ப்பித்த பின்னர் டி.என்.பி.எல். போட்டிகளில் அனுமதிக்கப்பட உள்ளதாக சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்