உலக கோப்பை கால்பந்து போட்டி: 52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது ரஷ்யா

உலக கோப்பை கால்பந்து தொடரில் பெனால்டி சூட் மூலம் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா, 52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி: 52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது ரஷ்யா
x
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த போட்டியில், 12-வது நிமிடத்தில் ரஷ்ய வீர‌ர் செர்ஜி, பந்தை தடுக்கும் முயற்சியின் போது எதிர்பாராத விதமாக சேம்சைட் கோலாக மாற உள்ளூர் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரஷ்ய வீர‌ர் டியூபா கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் சமனில் முடிய, வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. ரஷ்ய கோல் கீப்பர் அபாரமாக செயல்பட, 4 -3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா, உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது குரோஷியா - பெனால்டி ஷீட் மூலம் டென்மார்க்கை வீழ்த்தியது.


மற்றொரு போட்டியில், டென்மார்க் அணியை வீழ்த்தி குரோஷியா அணி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆட்டம் தொடங்கி 58 நொடிகளில் முதல் கோலை பதிவு செய்து டென்மார்க் அணி வீர‌ர் மதியாஸ் ஜோர்கன்சன் அசத்தினார். ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலே குரோஷியா அணி பதில் கோல் அடித்தது. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் சூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில், டென்மார்க் அணியை வீழ்த்திய குரோஷியா அணி, காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்