உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல், அர்ஜென்டினா வெளியேற்றம்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து போர்ச்சுக்கல், அர்ஜென்டினா அணிகள் வெளியேற்றம். மெஸ்ஸியும், ரொனால்டோவும் கோல் அடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம்
உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல், அர்ஜென்டினா வெளியேற்றம்...
x
உலகக் கோப்பை கால்பந்து - காலிறுதிக்கு முன்னேறியது, உருகுவே



உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மற்றொரு நாக் அவுட் சுற்றுப் போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணியை உருகுவே அணி வீழ்த்தியது.  ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே போர்ச்சுக்கல் அணியின் கவானி முதல் கோலடிக்க 1 க்கு 0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. 55வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் பீபே கோலடித்தார். இந்தநிலையில், 62வது நிமிடத்தில் கவானி மீண்டும் கோலடிக்க 2 க்கு1 என்ற கோல் கணக்கில் உருகுவே மீண்டும் முன்னிலை பெற்றது. பின்னர் கோல் அடிக்க முற்பட்ட போர்ச்சுகல் அணியின் முயற்சிகள் பலன் அளிக்காததால்  2க்கு1 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ கோல் எதுவும் அடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் - தொடரில் இருந்து வெளியேறியது அர்ஜென்டினா



நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவும், பிரான்சும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் அணி கோலாக மாற்றியது. இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான அர்ஜென்டினா அணி, 41 மற்றும் 48வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து 2 க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமனானது. இந்த நிலையில், பிரான்ஸ் அணியின் இளம் வீரர், கிளியான் எம்பாப்பே ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்பாப்பே, 64 மற்றும்68வது நிமிடங்களில்  அடுத்தடுத்து 2 கோல் அடிக்க பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து மிகவும் போராடிய அர்ஜென்டினா ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடிக்காதது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. மெஸ்ஸியின் உலகக் கோப்பை வெல்லும் கனவும் இம்முறையும் நிறைவேறாமல் கானல் நீரானது.

Next Story

மேலும் செய்திகள்