கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

அரையிறுதியில் தென்கொரியாவை வீழ்த்தியது
கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா
x
கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 36க்கு 20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் அதிகபட்சமாக 10 புள்ளிகள் பெற்றார். இதையடுத்து, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், இந்திய அணி,  ஈரானை எதிர்கொள்கிறது.

Next Story

மேலும் செய்திகள்