இந்தியா VS அயர்லாந்து டி-20 கிரிக்கெட் : 2-க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா
அயர்லாந்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிரடி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. கே.எல் ராகுல் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரின் சூறாவளி பேட்டிங் காரணமாக, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள், தொடக்கம் முதலே, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 12.3 ஓவரிலே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2க்கு 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
Next Story