செனகலை வீழ்த்தி கொலம்பியா அபாரம். நாக் அவுட் சுற்றுக்கு கொலம்பியா தகுதி

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு செனகலை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு கொலம்பியா முன்னேறியது.
செனகலை வீழ்த்தி கொலம்பியா அபாரம். நாக் அவுட் சுற்றுக்கு கொலம்பியா தகுதி
x
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு செனகலை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு கொலம்பியா முன்னேறியது. ரஷ்யாவின் சமாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் செனகல் கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தது. ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கீக் வாய்ப்பை கொலம்பியாவின் மினா கோலாக மாற்ற, இறுதியில் 1க்கு0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

ஜப்பானுக்கு எதிரான போட்டியில் போலந்து வெற்றி தோல்வி அடைந்தும் ஜப்பான் அணி முன்னேற்றம்


உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் போலந்து வென்றது. இருப்பினும் நாக் அவுட் சுற்றுக்கு ஜப்பான் அணி தகுதி பெற்றுள்ளது. வோல்கோகிராட் நகரில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் போலந்து அணி 59வது நிமிடத்தில் கோல் அடித்தது. ஜப்பான் வீரர்கள் முயற்சித்தும் பதில் கோல் அடிக்க முடியாததால், 1க்கு0 என்ற கணக்கில் போலந்து வென்றது. இருப்பினும், செனகல், ஜப்பான் அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றும், அதிக மஞ்சள் அட்டைகள் பெறாமல் விளையாடியதால் ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

உலக கோப்பை கால்பந்து தொடர் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது, இங்கிலாந்து

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் கடைசி லீ்க் ஆட்டத்தில், ஜி குரூப்பில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியுடன், பெல்ஜியம் அணி மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும், கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, இரண்டாவது பாதி ஆட்டம் பரபரப்பாக தொடங்கிய நிலையில், 51வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஜனுஜாஸ், முதல் கோலை அடித்தார். கடைசி வரை இங்கிலாந்து வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியாததால், 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில், பெல்ஜியம் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்