உலக கோப்பை கால்பந்து தொடர்: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேறியது
உலகக் கோப்பை கால்பந்து தொடரிலிருந்து நடப்பு சாம்பியனான ஜெர்மனி வெளியேறியது.
உலக கோப்பை கால்பந்து தொடர்: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேறியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரிலிருந்து நடப்பு சாம்பியனான ஜெர்மனி வெளியேறியது. ரஷ்யாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென்கொரிய அணியிடம் ஜெர்மனி மோதியது. போட்டியின் 90 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் நடுவர் வழங்கிய கடைசி 6 நிமிடங்களில் தென்கொரிய அணி 2 கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
உலக கோப்பை கால்பந்து தொடர்: மெக்ஸிகோவை வீழ்த்தியது ஸ்வீடன்
மெக்சிகோவுக்கு எதிரான மற்றொரு லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெனால்டி வாய்ப்பு மற்றும் மெக்சிகோவின் OWN Goal என ஸ்வீடன் அணி இந்தப் போட்டியில் எளிதில் வென்றது. மெக்சிகோ தோல்வி அடைந்தாலும் F பிரிவிலிருந்து இவ்விரு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
உலககோப்பை கால்பந்து தொடர்: செர்பியாவை வீழ்த்தியது, பிரேசில்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று 'இ' பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள பிரேசில் அணி, கடைசி லீக்கில் செர்பியாவுடன் மோதியது. இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.
கோஸ்டாரிகா-சுவிஸ் ஆட்டம் "டிரா"
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், 'இ' பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள சுவிட்சர்லாந்து, கடைசி லீக் ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணியுடன் மோதியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிலிரிம், முதல் கோலை பதிவு செய்தார். இதையடுத்து, கோஸ்டாரிகா வீரர் கெண்டால் வாஸ்டன், ஒரு கோல் அடித்து ஆட்டத்தினை சமன் செய்தார். பின்னர், பரபரப்பாக தொடர்ந்த இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோசிப், கோஸ்டாரிகா வீரர் சோமர் ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, 2க்கு 2என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.
Next Story