உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா

உலக கோப்பை கால்பந்து தொடர்: நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா. டி-பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷியா
உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா
x
அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி


ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற லீக் போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நைஜீரியா அணியை வீழ்த்தியது. டி பிரிவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அர்ஜென்டினா அணி,  ஆட்டநேர முடிவில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் நைஜீரிவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு, அர்ஜென்டினா அணி முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பெரு..உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் பெரு அணி,  ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. சோச்சியில் நடைபெற்ற இந்த  போட்டியில், ஆட்ட நேர முடிவில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் பெரு அணி வெற்றி பெற்றது.

டென்மார்க் - பிரான்ஸ் ஆட்டம் டிரா


மாஸ்கோவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரின் மற்றொரு லீக் ஆட்டத்தில் டென்மார்க் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. சி பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்