உலகக் கோப்பை கால்பந்து போட்டி: பனாமாவை பந்தாடிய இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி பனாமாவை வீழ்த்தியது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி: பனாமாவை பந்தாடிய இங்கிலாந்து அணி
x
ரஷ்யாவின் நோவாகிராட் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் ஸ்டோன்ஸ் கோல் அடித்தார். இதே போன்று இங்கிலாந்து அணி கேப்டன் HARY KANE 22 மற்றும் 45வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதே போன்று 62ஆவது நிமிடத்தில் ஹாட்ரிக் கோலை இங்கிலாந்து அணி கேப்டன் கேன் பதிவு செய்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி கேன் படைத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 6-க்கு 1 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது. உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் 6 கோல்கள் அடித்தது இதுவே முதல் முறை.Next Story

மேலும் செய்திகள்