கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி

கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி, 29 புள்ளிகள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.
கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி
x
கபடி மாஸ்டர்ஸ் தொடரில், 29 புள்ளிகள் வித்தியாசத்தில், கென்யாவை இந்திய அணி வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 48 புள்ளிகள் பெற்றது. இந்திய அணி வீரர்களை கட்டுப்படுத்த, கென்ய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் அவர்களால் 19 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதையடுத்து 29 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.  இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் மோனு மற்றும் ரிசாங்க தலா 10 புள்ளிகள் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்