உலக கோப்பை கால்பந்து தொடர் - கோஸ்டாரிகாவை வீழ்த்தியது பிரேசில்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து தொடர் - கோஸ்டாரிகாவை வீழ்த்தியது பிரேசில்
x

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணி, கோஸ்டாரிகா அணியுடன் மோதியது. இதில் பிரேசில் அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. பிரேசில் அணிக்கு போட்டியின் கடைசி வரை கோஸ்டாரிகா வீரர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினர். இந்நிலையில், போட்டியின் கடைசி நிமிடங்களில் பிரேசில் அணியின் நெய்மர், பிலிப் கவுடிகோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

உலக கோப்பை கால்பந்து தொடர் - ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா

ரஷ்யாவின் வோல்கோகிராடு நகரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் நைஜீரியா அணி, ஐஸ்லாந்து அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தில், நைஜீரிய அணியினர் அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த போதிலும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் எழுச்சி கண்ட நைஜீரியாவின் அகமது மூசா, 49வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதேபோல், ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் மூசா இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இந்நிலையில் கடைசி வரை போராடிய ஐஸ்லாந்து அணியினரால் கோல்  அடிக்க முடியவில்லை. இதையடுத்து  நைஜீரியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

உலக கோப்பை கால்பந்து தொடர் - செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

ரஷ்யாவின் வோல்கோகிராடு நகரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் நைஜீரியா அணி, ஐஸ்லாந்து அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தில், நைஜீரிய அணியினர் அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த போதிலும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் எழுச்சி கண்ட நைஜீரியாவின் அகமது மூசா, 49வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதேபோல், ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் மூசா இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இந்நிலையில் கடைசி வரை போராடிய ஐஸ்லாந்து அணியினரால் கோல்  அடிக்க முடியவில்லை. இதையடுத்து  நைஜீரியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்