உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா
பதிவு : ஜூன் 22, 2018, 08:07 AM
உலக கோப்பை கால்பந்து தொடர் - பிரான்ஸ், குரோஷியா அணிகள் வெற்றி; டென்மார்க் - ஆஸ்திரேலியா போட்டி டிரா...
உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா


ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை, குரோஷியா அணி சந்தித்தது. குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இடையிலான  போட்டியில் குரோஷியா, 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. குரோஷியாவின் ஆண்ட் ரெபிக், ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, அந்த அணியின் லூகா மோட்ரிக், 80வது நிமிடத்திலும், இவான் ராக்கிடிக் 91வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து, அந்த அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணி, கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறியது ரசிகர்களை கவலை அடையச் செய்தது.

உலக கோப்பை கால்பந்து தொடர் - பெரு அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற  போட்டியில் பெரு அணியுடன், பிரான்ஸ் அணி மோதியது.   போட்டியின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கெலியான் எம்பாப்பே கோல் அடித்தார். இதன் மூலம் 19 வயதான எம்பாப்பே , உலக கோப்பை தொடரில் கோல் அடித்த இளம் பிரான்ஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 2-வது முறையாக தோல்வியை தழுவிய பெரு அணி, தொடரிலிருந்து வெளியேறியது.

உலக கோப்பை கால்பந்து தொடர் : டென்மார்க்-ஆஸ்திரேலியா போட்டி டிராஉலக கோப்பை கால்பந்து தொடர் லீக் ஆட்டத்தில் டென்மார்க் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில், 7ஆவது நிமிடத்தில் டென்மார்க் வீரர் எரிக்சன் ஒரு கோலும், 38ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெடினாக் ஒரு கோலும் அடித்தனர். பின்னர் இறுதிவரை இரு அணிகளுக்கும் கோல் எதுவும் அடிக்காததால்,  1க்கு 1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் காக்காடு ராணுவ ஒத்திகை பயிற்சி நிறைவு

வடக்கு ஆஸ்திரேலியா ராணுவ பயிற்சி பகுதியில் நடைபெற்று வந்த காக்காடு போர் ஒத்திகை பயிற்சி நிறைவடைந்துள்ளது.

68 views

வானில் சிறகு விரித்து பறந்த வீரர்கள்...

பொலிவியாவில் பாராசூட்டின் உதவியுடன் வானில் சிறகடிக்கும் பாராகிளைடிங் போட்டி நடைபெற்றது.

63 views

உலக கோப்பை டாங்கோ நடனப் போட்டி - நடன அசைவுகளால் வசீகரித்த ஜோடிகள்

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிசில், உலக கோப்பை டாங்கோ நடன தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது

103 views

உலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி

பிரான்ஸில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்களில் நான்கு பந்தயம் என்று நடைபெற்ற இந்த போட்டியில், பிரான்ஸை சேர்ந்த அண்டனி வென்றுள்ளார்.

59 views

கின்னஸ் சாதனை படைத்த உரங்குட்டான் குரங்கு, தமது 62வது வயதில் உயிரிழந்துள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த உரங்குட்டான் குரங்கு, தமது 62வது வயதில் உயிரிழந்துள்ளது.

618 views

பிற செய்திகள்

தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் - நாகப்பட்டினத்தில் வரும் 27ந்தேதி தொடக்கம்

தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள், வரும் 27 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

24 views

கேல் ரத்னா விருதை பெற்றார் விராட் கோலி

2018ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

65 views

மாநில அளவிலான வாலிபால் போட்டி - சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன்

சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிபோட்டியல் திருப்பத்தூர் தூய இருதயக்கல்லூரியை எதிர்கொண்ட லயோலா கல்லூரி அணி, 25க்கு18, 25க்கு23, 25க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

9 views

தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் வரும் 27ந்தேதி தொடக்கம் - வாசு, இணை இயக்குனர், என்.எஸ்.எஸ்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள், வரும் 27 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

24 views

ஆசியக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

259 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.