உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல்-உருகுவே-ஸ்பெயின் வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக உருகுவே தகுதி....
உலக கோப்பை கால்பந்து தொடர் - சவுதி அரேபியாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி




ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உருகுவே, சவுதி அரேபிய அணிகள் மோதின. தனது 100வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய உருகுவே அணி நட்சத்திர வீரர் சுவாரெஸ், ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கோல் அடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிவரை சவுதி அரேபியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மொராக்கோ அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அணி வெற்றி

இதேபோல் மாஸ்கோ நகரில் நடைபெற்ற "பி" பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - மொராக்கோ அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில், போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. இந்த கோலை அந்த அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
ஈரான் அணியை வீழ்த்தியது ஸ்பெயின்

மற்றொரு லீக் போட்டியில் ஈரான் அணியை 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. கசான் நகரில் நடைபெற்ற "பி" பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் டியாகோ கோஸ்டா , 54 வது நிமிடத்தில் கோல் அடித்தார். பதிலுக்கு ஈரான் கோல் அடிக்காத நிலையில், ஸ்பெயின் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Next Story