முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய பனாமா

முதல் மறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய பனாமா, ஆட்டத்தின் முதல் பாதியில் காட்டிய முனைப்ப, 2வது பாதியில் காட்ட தவறிட்டாங்க..
முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய பனாமா
x
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக களமிறங்கிய பனாமா அணி  பெல்ஜியத்தை எதிர்கொண்டது. பனாமா அணி ஆட்டத்தின் முதல் பாதியில்,  பெல்ஜியம் அணி வீரர்களை தங்களது உத்தியாக கட்டுப்படுத்தினர். இதனால் முதல் பாதியில் யாரும் கோல் அடிக்குல. பனாமா வீரர்கள் தங்களை கட்டுப்படுத்துவதை பெல்ஜியம் அணி வீரர்கள் விரும்பல. இதனால் தங்களுக்குகே உரிய ஆக்கோரஷமான ஆட்டத்தை கையில் எடுத்த பெல்ஜியம் வீரர்கள் 47வது நிமிடத்திலே முதல் கோல் அடித்தனர். 

இதுக்கு அப்புறம் ஒரு ஃபார்ம்க்கு வந்த பெல்ஜியம் அணி வீரர்கள். 69வது நிமிடம் மற்றும் 75 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாக்கு( Lukaku) கோல் அடிக்க, பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 1990ஆம் ஆண்டு பிறகு இப்போ தான் பெல்ஜியம் முதல் முறையாக 3 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாங்க. முதல் மறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய பனாமா, ஆட்டத்தின் முதல் பாதியில் காட்டிய முனைப்ப, 2வது பாதியில் காட்ட தவறிட்டாங்க..

திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி

இங்கிலாந்து, துனிசியா மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தா அமைஞ்சது.  12 ஆண்டுகளுக்கு பிறகு துனிசியா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றாங்க.. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை, இங்கிலாந்து அணி கேப்டன் ஹரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார். இருப்பினும் மனம் தளராத துனிசியா , போட்டியின் 35வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற ஆட்டம் 1க்கு1 சமனானது. 

போட்டி டிராவில் தான் முடிய போகுதுனு எல்லாரும் நினச்சப்போ, ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் கேன் 2வது கோல் அடித்து, இங்கிலாந்தின் மானத்தை காப்பாற்றினார். இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், ஈஸி ஜெய்க்க வேண்டியத கஷ்டப்பட்டு ஜெய்ச்சாங்கலே அப்படிங்குற வருத்தம் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்