பொம்மை கார் பந்தயம் : அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு

அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு - பார்பி கார் ரேசிங் பொம்மை கார் - ஆனால் குழந்தைகளுக்கான விளையாட்டு அல்ல சரிவான பாதையில் பொம்மை கார் மீது சவாரி உருண்டு, பிரண்டு இலக்கை அடையும் போட்டியாளர்கள்.
பொம்மை கார் பந்தயம் : அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு
x
பொம்மை கார் மீது  அமர்ந்து அதிவேகத்தில் மலைச்சரிவில் சறுக்கிகொண்டே இலக்கை அடைவது தான்  இந்த போட்டியின் பிரதான விதி... 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இந்த விளையாட்டு  முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகின் பல நாடுகளும் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போட்டியை ஆரம்பிக்கும் முன்பாக, போட்டியாளருக்கான பொம்மை கார்கள் தேர்வு செய்ய ஒரு போட்டி நடக்கும்... சரிவான பாதையில், வீரர்களுக்கு ஓட்ட பந்தயம் நடக்கும், பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புவோர்   ஓடியும் வரலாம், உருண்டும் வரலாம், முதல், இரண்டு என போட்டியில் இடம் பிடிப்பவர்கள், தங்களுக்கான பொம்மை கார்களை தேர்வு செய்யலாம். இறுதி இடம் பிடிப்பவருக்கு, மிஞ்சியிருக்கும் கார் தான் கொடுக்கப்படும்.

சரிவான பாதையில் ஒவ்வொருவராக பொம்மை காரை ஓட்டிகொண்டு அதிவேகத்தில் கீழ்நோக்கி வருவர்...  இதே போல, இருவர் மற்றும் பலர் ஒரே நேரத்திலும் போட்டியில் பங்கேற்கின்றனர்.  காரை ஓட்டிக்கொண்டு தான் வரவேண்டும் என்று அவசியம் இல்லை... உருண்டு, ஓடி எப்படி வேண்டுமானாலும் இலக்கை அடையலாம்.. ஆனால் இலக்கை அடையும் போது, கார், போட்டியாளருடன் இருப்பது அவசியம்.

இந்த போட்டியில் பங்கேற்க தலைக்கவசம் அவசியம். 15 வயதிற்கு மேலானவர்கள் மட்டும் போட்டியில் அனுமதிக்கப்படுவர். காரின் டயர் உள்பட அனைத்தும் பிளாஸ்டிக்கால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும்... காரில் பிரேக்குகள் இருக்காது என்பதால் அதிவேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், போட்டியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுண்டு, இதனால், போட்டியாளர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்படுகின்றன,  சில சமயங்களில் போட்டியாளர்கள் மற்றும் கார்கள் பறந்து சென்று சுற்றிநிற்கும் பார்வையாளர்கள் மீதும் விழுவதுண்டு. 

இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, பெரும்பாலும் இலவசமாக உணவு, 10 டாலர் பணம் போன்ற சிறிய அளவிலான பரிசுகளே வழங்கப்படுகின்றன. மக்களை மகிழ்விக்கும் நோக்கில் போட்டியாளர்கள் உற்சாகத்துடனே பங்கேற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்