2வது முறையாக கோல்டன் வாரியர்ஸ் சாம்பியன்

என்.பி.ஏ. அமெரிக்க தேசிய கூடைப்பந்து தொடர் தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் வாரியர்ஸ் சாம்பியன்
2வது முறையாக கோல்டன் வாரியர்ஸ் சாம்பியன்
x
7 போட்டிகள் கொண்ட இறுதிச் சுற்றில் சிளிவ்லெண்ட் அணியும், GOLDEN STATE WARRIORS அணியும் மோதியது. 3 போட்டிகளில் வாரியர்ஸ் வென்று முன்னிலையில் இருந்த நிலையில் 4வது போட்டி சிளிவ்லெண்ட்  நகரில் நடைபெற்றது. விறுவிறுப்பான இப்போட்டியில் 108க்கு 84 என்ற புள்ளிகள் கணக்கில் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணி வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டது. வாரியர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீபன் குரி 37 புள்ளிகள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். சிளிவ்லெண்ட் அணியின் நட்சத்திர வீரர் லிப்ரான் ஜேம்ஸ் 21 புள்ளிகள் குவித்தார். தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை தவறவிட்டதால், லிப்ரான் ஜேம்ஸ் வேறு அணிக்கு மாறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்