"ஆப்கான் டெஸ்ட் எனக்கு முக்கியம் அல்ல" - பி.சி.சி.ஐ. நிபந்தனையை நிராகரித்த கோலி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.யின் நிபந்தனையை கேப்டன் விராட் கோலி நிராகரித்துள்ளார்.
ஆப்கான் டெஸ்ட் எனக்கு முக்கியம் அல்ல - பி.சி.சி.ஐ. நிபந்தனையை நிராகரித்த கோலி
x
ஜூலை மாதம் தொடங்கும் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் களமிறங்க கோலி முடிவு செய்தார். அதற்கு அனுமதி வழங்கிய பி.சி.சி.ஐ. ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி களமிறங்க வேண்டும் என்று நிபந்தனை அளித்தது. இதனை நிராகரித்துள்ள கோலி, இங்கிலாந்தின் சரே (SURREY) என்ற கவுண்டி அணியில் களமிறங்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுவதே முக்கியம் என்றும்  கோலி கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்