20 வருஷ ரண வலி... பழிதீர்க்குமா இந்தியா? | World Cup 2023 | Ind Vs NZ

x

20 வருஷ ரண வலி.. பழிதீர்க்குமா இந்தியா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மல்லுக்கட்ட உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் நியூசிலாந்து 5 முறையும் இந்தியா 4 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இம்முறை அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில், இன்றையப் போட்டியில் இந்தியா களமிறங்கக்கூடும். அதே சமயம் கணிக்க முடியாத நியூசிலாந்து அணி, மீண்டும் அதிர்ச்சி அளிக்க முயலும் என்பதால் அரையிறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்