ஒரே ஓவரில் நிஜமான ஈ சாலா கப் நம்து.. அற்புதத்தை நிகழ்த்திய பெர்ரி - மந்தனாவால் நிறைவேறிய 16வருட கனவு

x

ஒரே ஓவரில் நிஜமான `ஈ சாலா கப் நம்து'... அற்புதத்தை நிகழ்த்திய பெர்ரி - மந்தனா வார்த்தையால் நிறைவேறிய 16வருட கனவு

#wpl2024 #india #cricket #royalchallengersbangalore #rcb #dc #delhicapitals #smiritimandhana #champion #thanthitv

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய டெல்லி 19வது ஓவரில் 113 ரன்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து 114 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி யில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டெவைன் தொடக்க ஜோடி நிதானமாக விளையாடியது. டெவைன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த எலைஸ் பெரி பொறுப்புணர்ந்து ஆடினார். மந்தனா 31 ரன்களுக்கு கேட்ச் ஆன நிலையில் எலைஸ் பெரி - ரிச்சா கோஷ் ஜோடி பெங்களூருவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 19 புள்ளி 3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெரி 35 ரன்களுடனும் ரிச்சா கோஷ் 17 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வசப்படுத்தியுள்ள பெங்களூரு, அந்த அணி ரசிகர்களின் நீண்ட கால கனவையும் நனவாக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்