வாட்ஸ் அப்பில் அந்தரங்க வீடியோ கால்... பாஜக தலைவருக்கு வலை விரித்த பெண்

x

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனின் செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் வந்துள்ளது. அதனை அவர் தொடர்புகொண்டு பேசியபோது, மறுமுனையில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் பேசவே, அதிர்ச்சி அடைந்த அவர், செல்போன் தொடர்பை துண்டித்துள்ளார். பின்னர் மற்றொரு எண்ணிலிருந்து சாமிநாதனை தொடர்புகொண்ட மர்மநபர், 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், மறுப்பு தெரிவித்தால், செல்போனில் பெண்ணிடம் பேசிய வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சாமிநாதன், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கவே, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மர்மநபர்கள் தொடர்புகொண்டது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்