மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்தின் சினிமா பயணம்

x

ஆம்... தனது நற்பணிகளால் பலராலும் போற்றப்படுபவர்தான் விஜயகாந்த்.

1952-ல் திருமங்கலத்தில் பிறந்தவர், 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, தந்தையின் ரைஸ் மில்லில் வேலையை தொடங்கினார்.

பள்ளிபருவத்திலே எம்.ஜி.ஆர்.- யின் தீவிர ரசிகராக இருந்தவருக்கு, திரையில் நடிக்கும் ஆசையும் துளிர்விட்டது.

அப்படி வந்தவருக்கு அவமானங்களையும், நீண்ட போராட்டங்களையும் தாண்டிதான் கிடைத்தது திரையில் நடிக்கும் வாய்ப்பு... அதுவும் இனிக்கும் இளமை திரைப்படத்தில் வில்லனாக.

2 ஆவது படமான அகல் விளக்கில்தான் கதாநாயகர் ஆனார் விஜய்காந்த்...

ஏழை மக்களுக்கு தோழராகவும், கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடிக்க தொடங்கியவருக்கு, சட்டம் ஒரு இருட்டறை முதல் வெற்றிகரமான படமாக அமைந்தது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய காலம்.. தனக்கென தனி பாதையில் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.

1984 தீபாவளியில் வெளியான வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்தின் பெரிய வெற்றிப்படமானது.

மதுரை சூரன், அம்மன் கோவில் கிழக்காலே, கரிமேட்டு கரிவாயன், உழவன் மகன் என ஏராளமான படங்களில் நடித்தவர்...

ஊமை விழிகளில் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்திருப்பார்.

ஹானஸ்டான போலீஸ் அதிகாரியாகவும், அதிரடி நாயகனாக வலம் வந்தாலும் காதல் காட்சிகளிலும் தனியிடம் பிடிக்க தொடங்கினார்

ஊழலை எதிர்க்கும் அரசு அதிகாரி... தீவிரவாதத்தை வேரரூக்கும் ராணுவ அதிகாரி என்றெல்லாம் சொன்னாலே தமிழர்கள் உள்ளத்தில் பிம்பமாக தோன்றும் அளவிற்கு திரையுலகில் புகழ் பெற்றவர் விஜய்காந்த்.

100 ஆவது திரைப்படமான கேப்டன் பிரபாகரனில் அசத்தியிருப்பார்.

90-களில் அப்போதைய இளைஞர்களை கவரும் வகையில் படங்களை தேர்வு செய்தவர், அதில் அப்ளாஸ் வாங்க தொட்டங்கினார்.

சகநடிகருடன் மட்டுமல்ல, அடுத்த தலைமுறை நடிகர்களுடன் நடிக்க தவறவில்லை விஜய்காந்த்...

2000-த்திலும் தொடர்ந்து நடித்தவர், 150-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேப்டன் பிரபாகரன் வரிசையில் விஜயகாந்த்துக்கு மிகப்பெரிய க்ளாஸிக் சினிமாவாக அமைந்தது ரமணா..........

வகுப்பறையை தாண்டி மாணவர்களின் அறிவு விரிவடைய வேண்டியதை வலியுறுத்தியிருப்பார்...

எம்.ஜி.ஆர். ரசிகராக திரைக்கு வந்து, திரையுலகில் வெற்றிகள் பல கண்டு கருப்பு எம்ஜிஆர் என்றே புகழப்படும் அளவுக்கு வளர்ந்தவர் இவர் மட்டுமே.

பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் புகுந்தவர், உடல்நல குறைவால் அதில் சருக்கினாலும் மக்கள் நற்பணிகளை தொடர்ந்து செய்தவர்...

நாடி வந்தவர்களுக்கு இல்லையென சொல்லாமல் உதவியர் மறைந்துவிட்டாலும், எல்லோரும் பேசும் அளவுக்கு மாமனிதராக என்றுமே உயர்ந்து நிற்பார்...


Next Story

மேலும் செய்திகள்