மார்ச் 8-ல் சம்பவத்தை தொடங்கும் விஜய்?

x

தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்க, வரும் 8ஆம் தேதி, பிரத்யேக ஆப் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், 234 பொறுப்பாளர்களை கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பொறுப்பில் உள்ள நபர்கள் மாற்றுக்கட்சியில் உறுப்பினர்களாக இருக்க கூடாது எனவும், அவ்வாறு இருப்பின், அவர்களது மாற்றுக்கட்சி உறுப்பினர் அட்டையை இப்போதே மாவட்ட செயலாளரிடம் வழங்கிவிட வேண்டும் என்றும் கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்