அரசியல் எண்ட்ரி கொடுத்த விஜய் Ex அதிபர் வீட்டிலிருந்து வந்த அறிக்கை அமைச்சர் எழுதிய கடிதம்.. பரபரக்கும் களம்

x

விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நலத்திட்டப் பணிகளை மென்மேலும் முன்னெடுக்க அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் விஜய் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். சினிமா செல்வாக்கை மட்டும் பயன்படுத்தி எடுத்தோம், கவிழ்த்தோம் என அரசியல் பயணத்தை ஆரம்பிக்காமல், நன்கு திட்டமிடலுடன் ஆரம்பித்துள்ளார் என்பது, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் உறுதியாவதாக தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் வெற்றியளிக்க, மலையக மக்கள் சார்பிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துவதாக ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். இணைந்து பயணிக்ககூடிய இடங்களில் இணைந்து பயணிக்கவும், புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய இடங்களில் புரிந்துணர்வுடன் செயற்படவும் நாம் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்